ஷங்கர் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2 .இந்த படத்தில் கமல்ஹாசனுடன் , சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள காஜல் அகர்வால், அவரது மேக்கப் செட் புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டு, ஒரு வழியாக படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என ட்விட் செய்துள்ளார்.

இடையில் சில குழப்பங்களின் காரணமாக படம் தாமதமானது. இதனால் படம் அடுத்த வருடம் கோடைக்கு தான் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.