விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல பின்னணி பாடகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தொடங்கிய சூப்பர் சிங்கர் 8-வது சீசனுக்கு இசையமைப்பாளர் அனிருத் வருகை தந்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஆதித்ய கிருஷ்ணா குணச்சித்திர நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா என்ற பாடலுக்கு ஆதித்யா பாடி நடனமாடிய வீடியோவை மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.