இன்று சூப்பர் பக் மூன் எனப்படும் முழு நிலவை வானில் பார்க்க முடியும். பூமியை சுற்றி வரும் நிலவு இன்று பூமிக்கு அருகில் நெருங்கியிருக்கும் போதுகாணப்படும் முழு நிலவு என்பதால், இது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் அதுவே Super Buck Moon என அழைக்கப்படுகிறது.

இன்று பவுர்ணமி தினம் . அதனால் இன்றைய தினம் முழுநிலவு வானில் காணப்படும் இது பிரகாசமாகவே இருக்கும். இருந்தாலும் இன்றைய தினம் நிலவு பூமிக்கு அருகே வருவதால், அது மிகவும் பெரியதாகவும், அதிக பிரகாசமாகவும் காணப்படும்.
Buck Moon என அழைக்கப்படும் முழு நிலவு இந்தியாவில் இன்று இரவு 7.42 மணிக்குப் பிறகு தெரியும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஜூலை மாத முழு நிலவு நாளில் ஆண் மான்களின் கொம்புகள் வளரத் தொடங்குவதால், Buck Moon என அழைக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு நிறைய சூப்பர் மூன்கள் வருகிறது. இந்த ஆண்டு தொடர்ச்சியாக ஐந்து புதிய சூப்பர் மூன்கள் தோன்றும், மேலும் ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக மூன்று முழு சூப்பர் மூன்கள் தோன்றும். மேலும் 2026 ஜனவரி தொடக்கத்தில் ஒன்று தோன்றும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.