சார்ஜா:
ன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். பிரியம் கார்க் 7 ரன்னிலும், அபிஷேக் வர்மா 18 ரன்னிலும், அப்துல் சமது 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகா ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரஷித்கான் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
135 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்களும், டு பிளெசிஸ் 41 ரன்களும் எடுத்தனர்.  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.  இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் நாளை துபாயில் நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.