அயோத்தி நில வழக்கின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் முழுமனதோடு ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் உத்திர பிரதேச மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உத்திர பிரதேச மத்திய சன்னி வஃக்பு வாரியத்தின் தலைவர் சுஃபார் பருக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை முழுமனதோடு வரவேற்று ஏற்கிறோம். இந்த வாரியத்தின் தலைவர் என்கிற முறையில் இவ்வழக்கு தொடர்பாக மறுபரிசீலனை மனுவோ அல்லது கருணை அடிப்படையிலான மனுவோ தாக்கல் செய்யப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் வாரியத்தின் பெயரை குறிப்பிட்டு, தனி நபரோ அல்லது வழக்கறிஞரோ யாரேனும் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தால், அவர்களின் கருத்துக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1991ம் ஆண்டு வழிபாட்டு சட்டத்தினை ஓரங்கட்டிவிட்டு, அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.