சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் விண்வெளி மையம் சென்ற அவர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அவரை அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்பட்டது.

இருப்பினும், புதிய ஆய்வு பணிகள் காரணமாக அவர் 2025 பிப்ரவரி மாதம் தான் பூமி திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 5 மாதங்களுக்கும் மேலாக விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மேலும் சில மாதங்கள் அங்கு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் வெளியான அவரது புகைப்படம் மற்றும் சமீபத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியான புகைப்படங்களில் சற்று மெலிந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் அவர் மிகவும் எலும்பும் தோலுமாக மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டவராக காட்சி அளிக்கிறார்.

இது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள நாசா சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஒரு மாதமாகவே உடல் எடை குறைந்து வருவதாகவும் இது குறித்து தாங்கள் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

நாசா மருத்துவர்கள் அவரை உன்னிப்பாக கண்காணித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் சுனிதா வில்லியம்ஸின் தற்போதய நிலை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.