நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9மாதங்களாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அங்கிருந்து விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர்.
அமெரிக்க நேரப்படி, மார்ச் 17, திங்கட்கிழமை இரவு 10:45 மணிக்கு EDT மணிக்கு டிராகன் விண்கலத்தின் ஹேட்ச் மூடல் தயாரிப்புகளுடன் தொடங்கி, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் என்றும், அதன் நேரடி ஒளிபரப்பை நாசா வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள் பயணமாக பூமியில் இருந்து விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திருப்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் சென்ற விண்கலம் பழுதடைந்த காரணத்தால், அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான எலன் மஸ்க்கின் ஸ்பஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது/
இந்த விண்கலம் வெற்றிகரமாக மார்ச் 16ந்தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இதையடுத்து, சர்வதேவச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மேலும் 2 பேர் என 4 பேர் கொண்ட குழு டிராகன் விண்கலத்தின் மூலம் பூமிக்கு திரும்பும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதன் தொடர்ச்சியாக, டிராகன் விண்கலம், சர்வதேச விண்கலத்தில் இருந்து, அன்டாக்கிங் (பிரிக்கப்பட்டது) செய்யப்பட்டது. இதையடுத்த டிரான்கன் விண்கலம் பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளது. இந்த விண்கலம் இன்று இரவு அமெரிக்கா வந்தடைகிறது.
நாசா வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
காலை 12:45 மணி – NASA+ இல் அன்டாக்கிங் கவரேஜ் தொடங்குகிறது
அதிகாலை 1:05 மணி – அன்டாக்கிங்
அன்டாக்கிங் கவரேஜ் முடிந்த பிறகு, NASA ஆடியோவிற்கு மட்டுமே மாறும்.
ஸ்பிளாஷ் டவுன் தளங்களில் வானிலை நிலவரங்கள் நிலுவையில் இருப்பதால், மார்ச் 18 அன்று டார்பிட் எரிப்பு தொடங்குவதற்கு முன்பு NASA+ இல் தொடர்ச்சியான கவரேஜ் மீண்டும் தொடங்கும்.
மாலை 4:45 மணி – NASA+ இல் ரிட்டர்ன் கவரேஜ் தொடங்குகிறது
மாலை 5:11 மணி – டார்பிட் எரிப்பு (நேரம் தோராயமானது)
மாலை 5:57 மணி – ஸ்பிளாஷ் டவுன் (நேரம் தோராயமானது)
மாலை 7:30 மணி. – NASA+ இல் பூமிக்குத் திரும்பும் ஊடக மாநாடு,
நேரில் கலந்து கொள்ள விரும்பும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகங்கள் மார்ச் 18 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள செய்தி அறையை 281-483-5111 என்ற எண்ணில் அல்லது jsccommu@mail.nasa.gov என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
தொலைபேசி மூலம் பங்கேற்க ஆர்வமுள்ள அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் நிகழ்வின் நாளில் பிற்பகல் 3 மணிக்குள் நாசா ஜான்சனை தொடர்பு கொள்ள வேண்டும். ஏஜென்சியின் ஊடக நற்சான்றிதழ் கொள்கை ஆன்லைனில் கிடைக்கிறது என தெரிவித்துள்ளது. நாசா வெளியிட்ட தகவல்களின்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வரும் விண்கலம் பூமியை நோக்கி திரும்பும் தனது பணியை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா, வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் குழுவை வெறும் 8 நாட்கள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைத்தது. அந்த விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில், அந்த விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இக்குழு தங்களின் திட்டப்படி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை திருப்பி அழைப்பதில் முன்னாள் அதிபர் பைடன் அரசு அதீக ஆர்வம் காட்டவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், விண்வெளி நிலையத்தில் சிக்கியவர்களை திரும்ப அழைக்கும் முயற்சியை அதிபர் டிரம்ப் மேற்கொண்டார்.
இதையடுத்து தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலமாக புதிய குழுவினர் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதையடுத்து ஏற்கனவே அங்கு தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்த, நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களும் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.
இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடித்த நிலையில், பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் இன்று இரவு பூமியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது.