சென்னை: ஞாயிறன்று பொங்கல் பரிசு தொகுப்புபெற வழங்கப்பட்ட டோக்கனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் கடைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட நாளில் பயனர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக ஞாயிறன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அன்றைய தினம் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் பெற்றவர்களுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.