டெல்லி: கூகுள் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி 2022 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்த பணி செய்யும் வாய்ப்புகளை பல நிறுவனங்கள் அளித்துள்ளன. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், பல நாடு அரசுகள் முழுமையாக நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கி உள்ளன. இந்தியாவிலும் தொழிற்துறை நிறுவனங்கள், ஐடி, மென்பொருள் நிறுவனங்களும் கொரோனா நெறிமுறைகளுடன்  100 சதவிகிதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதிவழங்கி உள்ளது.  இருந்தாலும் கொரோனா 3வது அலை வரும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இருந்தாலும் பல நிறுவனங்கள் ஊழியர்கள் விருப்பப்பட்டால் நிறுவனத்து வரலாம் என அறிவுறுத்தி உள்ளது. அதுபோல, கூகுள் நிறுவனமும் விருப்பமுள்ள பணியாளர்கள் அலுவலகம் வந்து பணியாற்றலாம் என ஏற்கனவேதெரிவித்துள்ளது. அதன்படி, “உலகின் பல்வேறு பகுதிகளில் பல அலுவலகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு  பல ஆயிரக்கணக்கான குகூள் பணியாளர்கள் தாங்களாக அலுவலகத்திற்கு மீண்டும் வரத்தொடங்கி உள்ளனர். அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் 30 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  நிலையில், உலகம் முழுவதும் உள்ள கூகுள் பணியாளர்கள்  வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை  அடுத்தாண்டு ஜனவரி வரை நீட்டித்து கூகுள் தலைமையகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 2022  ஜனவரி 10ஆம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள கூகுள் பணியாளர்கள்  தொடரும் என்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு எப்போதிலிருந்து வரலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளூர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என கூகுள்  தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்களாகவே விரும்பமுடன் அலுவலகம் வந்து பணி செய்பவர்களை வரவேற்கிறோம் என்றவர்,  நாம் நினைத்தை விட நம்முடைய பயணம் சவால் நிறைந்ததாகவும் நீண்டதாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், இதை அனைவரும் ஒன்றிணைந்து கடப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.