விழுப்புரம்:  கோடை விடுமுறையை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வண்டி எண்: 06105, மே 2 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் என வாரம் நான்கு முறை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து காலை 4:15 மணிக்கு கிளம்பும் ரயில், விருத்தாச்சலம் (4:50/4:52), ஸ்ரீரங்கம் (06:06/06.08), திருச்சிராப்பள்ளி (06:25/06:30), திண்டுக்கல் (07:33/07:35), மதுரை (09.00/09:10), மானாமதுரை (09:53/09:55), ராமநாதபுரம் (10:38/10:40), வழியாக காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரம் வரும் சிறப்பு அதிவேக ரயில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

ராமேஸ்வரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வண்டி எண். 06106, ராமநாதபுரம் (பகல் 03:18/03:20), மானாமதுரை (மாலை 04:13/04:15), மதுரை (05:15/05:25), திண்டுக்கல் (06:13/06:15), திருச்சிராப்பள்ளி (இரவு 07:35/07:40), ஸ்ரீரங்கம் (08:00/08.02), விருத்தாச்சலம் (09:20/09:22), வழியாக இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றும், இருக்கை வசதிகள் கொண்ட 13 பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.