
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டயிடும் கனகராஜின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமானவரி துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான கனகராஜின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் கருப்பசாமி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர்.
கருப்பசாமியின் சூலூர் வீட்டில் வாக்களார்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரி தவமணி தலைமையில் அதிகாரிகள் கருப்பசாமி வீட்டில் சோதனை செய்தார்கள். .
மேலும் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த கருப்பசாமியின் சொகுசு கார்களையும் அதிகாரிகள் சோதனையிட்டார்கள். . இந்த சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. மூன்று மணிநேரம் நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
Patrikai.com official YouTube Channel