இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் அனிருத் பாடியுள்ள ஜெய் சுல்தான் என்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல நிறுவனமான AP International கைப்பற்றியுள்ளனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..

சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் ட்ரெய்லரில் வரும் காட்சிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்சாரில் சுல்தான் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யாரையும் இவ்ளோ அழகா பாடலின் ப்ரோமோ காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யோகிபாபுவின் நகைச்சுவையும், ராஷ்மிகா மற்றும் கார்த்தியின் துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் ப்ரோமோவை சிறப்பிக்கிறது.

[youtube-feed feed=1]