மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘மரக்கார்- அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த சினிமா கடந்த மார்ச் மாதம் வெளிவந்திருக்க வேண்டும்.
கொரோனாவால் ஒரு ஆண்டு கழித்து அடுத்த மாதம் (மார்ச்) 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. (ரிலீஸ் தேதி மாறலாம்)
இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
‘குழந்தை’ மோகன்லாலை. அவரது தாயார் சுஹாசினி “குஞ்சு குங்காலி” என தாலாட்டும் பாடல் தான், அது.
மகன் எப்படி வளர வேண்டும்? என தாய் ஆசைப்படுவது போல் பாடல் உள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
ஐந்து மொழிகளிலும் இந்த பாடலை கே.எஸ்.சித்ரா பாடி உள்ளார்.
மோகன்லால், சுஹாசினி தவிர பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேணு என பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது.
தமிழில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை ‘கலைப்புலி’ தாணு பெற்றுள்ளார்.
– பா. பாரதி