சென்னை:

ர்க்கரை குடும்ப அட்டைக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அனைத்து வகையான குடும்ப அட்டைதார்களுக்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு, வழங்கப்பட்டு வந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்,
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும், மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவு  எடப்பாடி அரசுக்கு விழுந்த சம்மட்டி அடி என விமர்சிக்கப்பட்டது. அரசும் இந்த தீர்ப்பை கடும் அதிருப்தியாக கருதியது.

அதுபோல முதல் 2 நாட்கள் ரூ.1000 வாங்கியவர்கள் லக்கி என்றும், மற்றவர்கள் அன்லக்கி என்றும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்த இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, நீதிபதிகள், ஓட்டுக்காக மட்டுமே அரசு  பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வழங்கப்படுவதாக பொதுமக்கள் எண்ணுகிறார்கள்  என்று கூறியது.

மேலும்,இலவச திட்டங்களை செயல்படுத்தும் போது பயனாளிகளை வரையறை செய்ய வேண்டும் என்ற நீதிபதிகள்,  ரேசன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி  தமிழகத்திலும் வெளிமார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருவ தாகவும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கே கடத்தப்படுகிறது என்றனர்.

தமிழகத்தில் இதுபோன்ற திட்டங்கள் வரையறை இல்லாமல் இலவச திட்டங்களை செல்படுத்துவது சரியான நடவடிக்கை இல்லை  என்று கண்டனம் செய்த நீதிபதிகள்,  அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தை அடுத்து,  தமிழக அரசின் கோரிக்கை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.