பம்பா:

வணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில்,  சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக கதிர் நம்பூதிரி தேர்வாகியுள்ளார்.  அதுபோல, மாளிகைப்புறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும்  குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவி காலம் ஓராண்டு காலம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தற்போதைய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரியின் பதவிக் காலம் ஐப்பசி மாதத்துடன் முடிகிறது. இதுபோல மாளிகை புரம் கோவில் மேல்சாந்தியின் பதவிக்காலமும் முடிகிறது. இந்த இரு கோவில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால்,  இந்த ஆண்டுமுதல் மேல்சாந்தி தேர்வு ஆவணி மாதமே நடக்கும் என்று ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்து கணபதி ஹோமம் நடத்தினார். காலை 7.30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர், புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது.

நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் தனித்தனி சீட்டில் எழுதப்பட்டு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டது. பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் வெள்ளிக் குடத்தில் இருந்து ஒரு சீட்டை எடுத்தனர். சபரிமலை கோவில் மேல்சாந்திக்கான சீட்டை ஆண் குழந்தையும், மாளிகைபுரம் மேல்சாந்திக்கான சீட்டை பெண் குழந்தையும் எடுத்தனர்.

இதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுறம் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

சுதிர்நம்பூதிரி  திரூர் பகுதியைச் சேர்ந்தவர். திருநாவ்யா நவமுகந்தன் கோவிலில் பணியாற்றியவர்.

மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு தேர்வான பரமேஸ்வரன் நம்பூதிரி  ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் ஆவணி மாதம் முழுவதும் கோவிலில் தங்கி இருந்து ஏற்கனவே பதவி வகிக்கும் மேல்சாந்தியிடம் இருந்து கோவில் வழிபாடுகள், பூஜை முறைகள் குறித்து பயிற்சி எடுப்பார்கள். கார்த்திகை மாதம் மண்டல கால பூஜைக்கு நடை திறக்கும்போது இவர்கள் மேல்சாந்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

[youtube-feed feed=1]