திருச்செந்தூர்
நேற்று திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியது.

ஒவ்வொரு மாதமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும் வழக்கமாகும்,
நேற்று அமாவாசை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.
இஆபாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. எனினும், பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடியதுடன், தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
Patrikai.com official YouTube Channel