குற்றால மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குற்றால மெயின் அருவிகளில் காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க மாவட்ட வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட வந்திருந்த பல சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.