கார்ட்டோம்: சூடான் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். சூடானில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமர் சாதிக் அல் மஹ்தி. 84 வயதான சஹ்தி 1989ம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட ராணுவ ஆட்சி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறியப்பட்டார்.