சென்னை: நாளை (சனிக்கிழமை) மூன்று வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைபடி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது தீபவாளி  தொடர் விடுமுறையையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறையில் இருப்பதால், மின்சார ரயில்களின் பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் பராமரிப்பு பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அதன்படி,   பராமரிப்பு பணிகள் காரணங்களுக்காக புறநகர் ரயில் சேவை 3 வழித்தடங்களில் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை போன்று நாளை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி,

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்,

சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை,

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு

ஆகிய 3 வழித்தடங்களில் இயங்கக்கூடிய புறநகர் ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.