சென்னை: பயணிகளின் வருகை அதிகரிப்பு எதிரொலியாக சென்னையில் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் சேவை 410 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வேஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ra

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த  6 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் மாதம் 5ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் படிப்படியாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் என பல தரப்பினருக்கும் அட்டை அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்யும் பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,  சென்னை கடற்கரை, சென்ட்ரலில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி தடங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.  தற்போது  சென்னையில் மின்சார ரயில்களின் சேவை நேற்று முதல் 410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வால் 90 சதவீத நிறுவனங்கள், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதால், புறநகரில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதியில் மின்சார ரயில்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. எனவே, பயணிகளின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, மின்சார சிறப்பு ரயில்கள் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என ரயில்வே தெரிவித்து உள்ளது.