சென்னை,

ஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து  தொடர்ந்து வம்பிழுத்து வரும் சுப்பிரமணியசாமி தற்போது, ரஜினிக்கு ஈடிகே 420 என்று புதிய பெயர் வைத்து மீண்டும் டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மருத்து பரிசோதனைக்காக ரஜினி வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் வெளிநாட்டில் யூரோ சூதாட்டத்தில் பங்குபெற்று வருகிறார் என்று கூறி உள்ளார்.

ஆன்மிகவாதியான நடிகர் ரஜினிகாந்தை பாரதியஜனதா தனது கட்சிக்கு இழுக்க பகிரத முயற்சி செய்தது. இதன் காரணமாக பிரதமர் மோடியே ரஜினி வீட்டுக்கு சென்று சந்தித்து வந்தார்.

இருந்தாலும், எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ரஜினி தெளிவான முடிவு அறிவிக்காமல், அவரது ரசிகர்களை குழப்பி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து விமர்சித்தார்.

இதன் காரணமாக ரஜினி அரசியலுக்கு வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அவர் எபோதும் போலவே மவுனத்தை பதிலாக அளித்து வருகிறார்.

இந்நிலையில், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தொடர்ந்து ரஜினியை தாக்கி பேசி வருகிறார்.

ரஜினிக்கு அரசியல் தெரியாது என்றும்,  ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும், அரசியலுக்கு வரக்கூடாது, ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும், முதல்வராக தகுதி யில்லை என்றும்  கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி வந்த சாமி, ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து என்று பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஈடிகே 420 என்று பெயர் சூட்டி மீண்டும் ரஜினியை சீண்டி உள்ளார்.

சமீபத்தில் காலா படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவ பரி சோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சுப்பிரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினி மருத்துவ பரிசோத னைக்காக வெளிநாடு செல்லவில்லை என்றும், ரஜினி அங்கு  யூரோ சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்றும்  அதிரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.

ரஜினி  கடந்த இரண்டு நாட்களாக, ஒரு அமெரிக்க வளாகத்தில் யூரோ காசினோ சூதாட்டத்தில் கலந்துகொண்டு விளையாடி வரும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில்தான் ரஜினியின் மகள் சவுந்தர்யா விவாகரத்து பெற்றுள்ள நிலையில், ஜிஎஸ்டி குறித்து ரஜினி கருத்து ஏதும் சொல்லவில்லை என்று விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, கேளிக்கை வரியை குறைக்கும்படி தமிழக அரசுக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார் ரஜினி.

இந்நிலையில் சுப்பிரமணியசாமி, “அவரது மகள்  விவாகரத்து,  தமிழ் சினிமாவில் ஜிஎஸ்டி பிரச்சினை,  ஆனால் இந்த பையன் அமெரிக்காவில் கேசினோ விளையாடுகிறான்” என்று கூறி உள்ளார்.

ரஜினி கேசினா விளையாடும் படங்களை மேற்கோள் காட்டி, சுப்பிரமணியசாமி தனது டுவிட்டரில் ரஜினிக்கு, ஈடிகே 420 என்றும் பெயரிட்டு டுவிட் செய்துள்ளார்.

ஏற்கனவே தமிழர்களை பொர்க்கி என்று கூறிய சுப்பிரமணியசாமி தற்போது ரஜினியை ஈடிகே 420 என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் ரஜினி, தனது நண்பருடன் காரில் செல்லும் செல்பி வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியசாமியின் டுவிட்டர் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.