பெங்களூரு

ர்நாடக அரசு பேருந்துகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வருகிற 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

எனவே இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு இலவசமாக பயணிக்கலாம் எனவும் தேர்வு நுழைவுச் சீட்டு காட்டி இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பேருந்துகளிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.