லக்னோ:
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், விடுதி காப்பாளர் பேய் வேடமிட்டு மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் கஷ்துரிபா பள்ளி விடுதி உள்ளது. அங்கு தங்கியிருந்து படித்து பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து தங்கள் விடுதி காப்பாளிர் பூனம் பாரதி மீது புகார் அளித்துள்ளனர்.
அதில், இரவு நேரங்களில் விடுதி காப்பாளர், பேய் போல் வேடமிட்டு மாணவிகளிடம் தாகாத முறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விடுதி காப்பாளர் பூனம் பாரதி, மாணவிகளின் புகார் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு, விசாரணை நடத்தினால் உண்மை என்ன என்பது தெரிய வரும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.