சென்னை: கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதில், மாணவர்கள் பயணம் செய்ய  அனுமதிக்க வேண்டும் என கமல் ஹாசன் வலியுறுத்தி டிவிட் போட்டுள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக  கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.  அதையடுத்து ரயில், பேருந்தும் போக்குவரத்தும் தடை பட்டது. பின்னர் தளர்வுகள் காரணமாக,  ரயில் மற்றும்  பொதுபோக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. புறநகர் ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், புறநகர் ரயிலில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது இறுதியாண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு செல்லும் வகையில், அவர்களுக்கு புறநகர் ரயிலில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. வெகுதொலைவில் இருந்து கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் புறநகர் ரயில் சேவை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,

“இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

[youtube-feed feed=1]