சென்னை
நிபா வைரஸ் கேரளாவில் அதிக அளவில் பரவுவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்ததாதல் இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
கடந்த ஆகச்ட் 30 அன்று கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் க உயிரிழந்தார். இதேபோல மேலும் அதே ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார்.
இரண்டாவதாக இறந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையேயான 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 2 சிறுவர்களுக்கு தனிவார்டில் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ந்த மருத்துவமனை இதுபற்றி, மாநில சுகாதாரத்துறைக்குத் தகவல் அளித்தது.
காய்ச்சலுக்கு இறந்த 2 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நேற்று வெளியாகி 2 பேரும் நிபா வைரஸ் பாதித்து இறந்தது உறுதியானது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே 2-வதாக இறந்த நபருடன் தொடர்பிலிருந்த அவரது குடும்பத்தினர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தனிவார்ட்டில் சிகிச்சை அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் கேரளாவில் உயிரிழந்த நிலையில் தமிழக எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தத் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே கன்னியாகுமரி, கோவை உள்படத் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் இருந்து வருவோர் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தமிழக எல்லைக்குள் வருவோரிடம் உடல்நல பரிசோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.