சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள வளிமண்ட கீழடுக்கு சுழற்றி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு – இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் வரும் 23ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமகாக இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் 25-ந்தேதி கனமழையும், 26-ந்தேதி மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 21) முதல் 25ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
26-11-2024: மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.