ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில் மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனால் கடலோர மாவட்ட பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் முழுமையாக கடலைக் கடக்க சுமார் 4 மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் நிலையில் இன்று இரவு 10 மணி வரை காற்றின் வேகம் அதிகரித்தே காணப்படும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை திரும்பபெறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் புயல் காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்துவிழ வாய்ப்பு இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அதிகாலை நேரங்களில் வெளியே வருபவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.