புவனேஷ்வர்: ‘போரை நிறுத்துங்கள்’ என பிரபல மணைல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்து ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்காக அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தும்படி, மணல் சிற்பம் வரைந்து வெளியுறுத்தி உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதர்சன் பட்நாயக் ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வலியுறுத்தி உள்ளார்.