புதுடெல்லி:
மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், மோடி அரசு “ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசரை” பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக மின் உற்பத்தி நிலையங்களை இயக்கத் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
நிலக்கரி மற்றும் மின்சார நெருக்கடி நாட்டில் பேரழிவை உருவாக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை உள்ளதா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஏப்ரல் 20, 2022 அன்று, ஆக்கிரமிப்புகளை கற்ற புல்டோசரை இயக்குவதை நிறுத்திவிட்டு, நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குமாறு மோடி அரசாங்கத்திடம் நான் கூறினேன். இன்று நிலக்கரி மற்றும் மின்சார நெருக்கடி நாடு முழுவதும் பேரழிவை உருவாக்கியுள்ளது.”
“மோடி ஜி, உங்களுக்கு நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலை இல்லையா” எனக் கேட்டு, “#BJPFailsIndia” என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினார்.