IPL 2016 போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த 43-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, உன்முக்சந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. உன்முக் சந்த் மற்றும் அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் மொகித் மற்றும் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி 3 ஓவர்களில் 8 /2 என்ற தடுமாறியது.
இந்த சருகளை நேர்த்தி செய்ய நிதிஷ் ராணா மற்றும் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தொடர்ந்ததால் பவுண்டரி, சிக்சர் அடிக்க முடியாமல் மும்பை வீரர்கள் திணறினார்கள். ரோகித் சர்மா 15 ரன்னில், நிதிஷ் ராணா 25 ரன்னில் அடுத்து அடுத்து அவுட் ஆக 14 வது ஓவர்களில் மும்பை அணி 61 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அதிரடி வீரர்கள் குணால் பாண்ட்யா, பொல்லார்ட்டுடன் இணைந்தார் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. ஸ்டோனிஸ் பந்து வீச்சில் குணால் பாண்ட்யா (19) பொல்லார்ட் (27) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
மும்பை அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது. ஸ்டோனிஸ் 4/15 அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். சந்தீப் மற்றும் மொகித் ஷர்மா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணி இந்த சொற்ப ரன்கள் எடுத்து பஞ்சாப் எளிதில் வெற்றி பெற காரணமானமானது.
FotorCreated
125 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க பஞ்சாப் அணி வீரர் ஹசிம் ஆம்லா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து கேப்டன் முரளி விஜய் சஹா ஜோடி சேர்ந்தார். இவர்கள் பொறுமையுடம் ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி இவர்கள் அரைசதம் அடித்தனர். 56 ரன்களில் சஹா ஆட்டமிழந்தார். 13 ரன்களே வெற்றி பெற இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்தது.
16.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் முரளி விஜய் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். அபாரமாக பந்துவீசிய ஸ்டோனிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் அவர்கள் IPL 2016 அடுத்த கட்டிற்கு செல்வது கடினம்தான்.