டில்லி :
மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா, இரு தினங்களுக்கு முன், ‘ஒருவர் பழைய நகைகளை வாங்கும் போது, 3 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டும். ஆனாலும் , இந்த பரிவர்த்தனையில் கிடைக்கும் வருவாயில், புதிய நகைகளை வாங்கினால், ஏற்கனவே செலுத்திய வரியை கழித்துக் கொள்ளலாம்’ என்று, தெரிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உளளது.
இந்த நிலையில் வருவாய் துறை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தனிநபர், பழைய நகைகளை கடைகளில் விற்கும் போது, ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை. அதே சமயம், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத சப்ளையர்களிடம் இருந்து பழைய நகைகளை, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த கடைக்காரர்கள் வாங்கும் போது, 3 சதவீத வரி வசூலிக்க வேண்டும். இந்த பரிவர்த்தனை, வர்த்தக நோக்கில் நடைபெறுவதால், இதற்கு, ஜி.எஸ்.டி., உண்டு.
எனினும், இந்த வரித் தொகையை, புதிய நகைகளுக்கு செலுத்தும் வரியில், உள்ளீட்டு வரி ஆதாயப் பிரிவின் கீழ் கழித்துக் கொள்ளலாம்.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பழைய வாகனங்கள் விற்பனைக்கும், இந்த நடைமுறை பொருந்தும். தனிநபர் விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பழைய வாகனங்கள் விற்பனைக்கும், இந்த நடைமுறை பொருந்தும். தனிநபர் விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.