ஜெனீவா: ஏழை நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து வாங்கப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறி உள்ளது.
கடுமையான, சிக்கலான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக காட்டப்படும் ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்து குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 4.5 மில்லியன் மக்களுக்கு ஆரம்ப கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) யுனிடெய்ட் மற்றும் வெல்கம் தலைமையிலான ஒப்பந்தத்தின் கீழ் முன்கூட்டியே வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இது உலக சுகாதார அமைப்பின் சிகிச்சைக்கான அணுகலை விரைவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து UNITAIDன் செயல் நிர்வாக இயக்குனர் பிலிப் டுனெட்டன் கூறி இருப்பதாவது: இந்த கொள்முதல் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு உயிர் காக்கும் மருந்து டெக்ஸாமெதாசோன் மூலம் கொரோனா சிகிச்சை வழங்க முடியும். மேலும், மற்ற பகுதிகளில் நிலவும் தட்டுப்பாட்டையும் போக்க முடியும் என்றார்.