சரஜீவோ:

ந்தியாவை சேர்ந்த பிரபல எஃகு தொழிலதிபரான லட்சுமி மிட்டல் சகோதரர்  பிரமோத் மிட்டல் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகின் மிகப்பெரிய இரும்பு ஆலை, ‘ஆர்ஸ்லர்-மிட்டல்’ உருவாகக் காரணமாக இருந்தவரான லட்சுமி மிட்டலை  ‘இரும்பு மனிதர்’ என்று உலக நாடுகள் அழைத்து வருகின்றன. அவரது சகோதரர் பிரமோத் மிட்டல்.

இவர்  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  போஸ்னியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.  போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றின் பங்குதாரராக உள்ள பிரமோத் மிட்டல், அந்த தொழிற்சாலையில் நடைபெற்ற மோசடி  மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பொருளாதார குற்றம், போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

போஸ்லினியா நாட்டு அரசின்,  அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தலின் பேரில், பிரமோத் மிட்டல், மற்றும்  அந்த தொழிற்சாலையின்  ஜெனரல் மானேஜர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றுமொரு நிர்வாகி 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பிரமோத் மிட்டல் மீது,  குறைந்தது 5 மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, $2.8 மில்லியன்) மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.