டில்லி

த்திய அரசின் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் ஆதார் அட்டையை எல்லா புழக்கத்திலும் இணைப்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், அதை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது

இன்று வெளியிட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின், பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை பெற்றிருப்பதோ, மற்றும் ஆதார் எண்ணை அத்துடன் இணைக்க வேண்டியதோ அவசியம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஆதார் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா என்பதை அரசியல் அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.