வாஷிடங்டன்: கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு சிகிச்சையளிப்பதில், Chloroquine Phosphate (CQ) மற்றும் Hydroxychloroquine Sulfate (HCQ) ஆகிய மருந்துகள் இனிமேலும் பயனற்றவை என்று கருதப்படுவதால், அவற்றுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம்(USFDA).
பயோமெடிக்கல் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(BARDA), செயல்பாட்டு இயக்குநர் கேரி டிஸ்ப்ரோ முன்வைத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“அந்த மருந்துகளின் மீதான அவசரகால பயன்பாட்டு அனுமதி நீக்கப்படுவதற்கான வேண்டுகோள், ஆய்வகப் பரிசோதனை தரவு முடிவுகளின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வக பரிசோதனைகள், கொரோனா சிகிச்சையில் இந்த மருந்தின் திறன்களை கேள்விக்குள்ளாக்கியதே இதற்கு காரணம்” என்றுள்ளார் USFDA அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டினைஸ் ஹின்டன்.
பரந்தளவிலான தோராய ஆய்வகப் பரிசோதனை முடிவுகளின்படி, இந்த மருந்தின் பயன்பாடு, வைரஸ் எதிர்ப்பு திறனை உருவாக்கவில்லை என்று கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.