ஆந்திராவில் சிலைகள் உடைக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் உங்களுக்கும் சிலைகள் உடைக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.

அதேபோல ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவருடைய தந்தையான ராஜசேகர் ரெட்டியின் பெயரை பல இடங்களில் வைத்தார். அதனை, தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடு இடித்து தரைமட்டமாக்கினார்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் வேறொரு ஆட்சி வரும்போது, நல்ல தன்மானமுள்ள தமிழ்மகனிடம் போனால் அனைத்தும் அதேபோல் பொட்டல் (கலைஞர் சிலை) ஆகிவிடும்.

திருடுபவனுக்கும், திருட்டை பாதுகாப்பவருக்கும் தான் திராவிடம். அதிமுக தொடங்கிய திட்டங்களை முடித்து வைத்து அதற்கு கலைஞர் பெயரை திமுக வைக்கிறது” என்று ஆவேசமாக பேசினார்.