கடலில் அலைகள் ஓயும் வரை காத்திருந்தால், இந்த ஜென்மத்தில் குளிக்க முடியாது அல்லவா?
ஊரடங்கும் ,கடல் அலையின் கதை தான்.
ஊரடங்கு எப்போது ஓயும்?
‘டாஸ்மாக்’ கடைகள் எப்போது திறக்கும்? என்ற மில்லியன் டாலர் கேள்வி குடிமகன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சில மாநில அரசுகளும், இதே கேள்வியை தங்களுக்குள் கேட்டதன் விளைவாக- ஊரடங்குக்கு மத்தியில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து விட்டன.
வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே மதுக்கடைகளை திறந்து விட்டுள்ளன.
சரக்கு தயாரிப்பு ஆலைகள் உற்பத்தியை தொடங்கவும் பச்சை கொடி காட்டி விட்டன, அந்த மாநிலங்கள்.
இப்போது-
டெல்லி மாநில அரசும் மதுக்கடைகளை திறப்பதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்து விட்டது.
ஊரடங்கை பாதிக்காமல் மதுக்கடைகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாநில கலால் துறையை கேட்டுள்ளது, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான , ஆம் ஆத்மி அரசாங்கம்.
ஏன் இந்த அவசரம்?
ஊரடங்கு காரணமாக டெல்லியில் மதுக்கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு மாதத்தில் மட்டும் அரசுக்கு வருவாய் இழப்பு, 500 கோடி ரூபாய்.
பணம் காய்ச்சும் மரத்தை பட்டுப்போகச்செய்ய யாருக்குத்தான் மனம் வரும்?