டெல்லி: கொரோனா தீவிர பரவலுக்கு மாநிலங்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு, அதை தேவையின்றி விரையமாக்குவதே காரணம் என்றும் என்றும் கூறி மாநிலங்கள் மீது பழியை சுமத்தி, தனக்கான பொறுப்பை மத்தியஅரசு தட்டிக்கழித்துள்ளது. இது மாநில அரசுகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. உலகிலேயே அதிக தொற்று பரவல் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. இதுவரை 1 கோடியே 50 லட்சத்துக்கு 61ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாககொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுபோல நேற்று ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய படுகை வசதி இல்லை என்றும், அவர்களுக்கு தேவையான ரெம்செவிவர் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜனும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் இறந்துள்ள சோகமும் நிகழ்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, தடுப்பூசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வரும் மத்தியஅரசு, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் வழங்க தடை விதித்து, உடனடியாக மருத்துவ மனைகளுக்கு சப்ளை செய்ய அறிவுறுத்தி உள்ளது. மேலும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை போட்டுள்ளதுடன், அதன் விலையை குறைத்து வழங்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த வாரம் இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது டெல்லி பிரதிநிதி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதை பியூஸ் கோயல், இது ஒரு குட்டி அரசியல் என்று விமர்சித்திருந்தார். மேலும், இந்தியாவில் அதிகபட்ச ஆக்ஸிஜன் உற்பத்தியை உறுதி செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது 110% ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனை உற்பத்தி செய்கிறோம், மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆக்ஸிஜனையும் தொழில்துறை பயன்பாட்டிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்புகிறோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகஅமைச்சர் பியூஸ் கோயல், கொரோனா பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலைவ தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யாமல், மாநிலங்கள் மீது பழிசுமத்தி, தனது பொறுப்புகளை தட்டிக்கழித்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின்போது, கொரோனா வழக்குகள் வரம்பற்ற அளவில் தொடர்ந்து அதிகரித்தால், அது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், நாங்கள் மாநில அரசாங்கங்களுடன் இருக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களது கோரிக்கையை ஏற்று, கொரோனா பரவலை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த கருத்து தெரிவித்த கோயல், நாம் மருத்துவ ஆக்ஸிஜனை பகுத்தறிவுடன் பயன்படுத்த வேண்டும் மற்றும் அதன் விரயத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால், பல மருத்துவமனைகளில், ஆக்ஸிஜன் வீணடிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு தேவையில்லை என்றாலும் அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன என்று குற்றம் சாட்டியவர், இதுபோன்ற நவடடிக்கைகளை கண்காணித்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து கண்காணிக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி இருப்பதாகவும் , மாநில அரசுகள் தேவையை (மருத்துவ ஆக்ஸிஜனுக்கான) கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதை தேவையை பூர்த்தி செய்வதில் மாநில அரசு திறமையாக செயல்பட வேண்டும் என்று கூறியதுடன், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதற்கு, அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பு, அவர்கள்தான், தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கூடியுள்ளார்.
கொரோனா மோசமான பாதிப்புக்குள்ளான 12 மாநிலங்களுக்கு 6177 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்கவும் மையம் முடிவு செய்துள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ஆக்சிஜன் வீணடிப்பு என்ற பியூஸ் கோயலின் குற்றச்சாட்டுக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எந்தவொரு நோயாளிக்கும் தேவையின்றி ஆக்சிஜன் கொடுக்கப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், நாடு முழுவதும் நிலவிரும் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற உண்மை நிலவரங்கறை மறைக்கவே, மாநில அரசுகள் மீதும் மருத்துவர்கள் மீது பழிபோட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா மருந்து, கொரோனா பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு மருந்து உள்பட அனைத்து விஷயங்களிலும் இதுவரை மாநில அரசுகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்யாமல், ஒருதலைப்பட்சமாக, பெரிய அண்ணனாக செயல்பட்டு, அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை சொல்லோனா துயரத்தில் ஆழ்த்தி வரும் மோடிஅரசு,
தற்போது தொற்று பரவல் தீவிரம் அ அடைந்துள்ள நிலையில், தேவையான மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றை சரி செய்ய முயற்சி எடுக்காமல், மாநில அரசுமீது பழியை போடுவது, மத்தியஅரசின் எதேச்சதிகார போக்கையே வெளிக்காட்டுகிறது.