நைபிடா

மியான்மர் ராணுவம் ஒரு வருடத்துக்கு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

மியான்மரில் ராணுவப்புரட்சி தொடர்ந்து நடைபெறும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடியாட்சி மீண்டும் தொடங்கியது.  ஆங் சான் சூகி தலைமையில் ஆட்சி அமைந்தது.  அதன் பிறகு நடந்த ரோஹிங்கியா இனப்  படுகொலை காரணமாக சூகியின் புகழ் குறைந்ததாக கூறப்பட்டது.

ஆயினும் நவம்பரில் நடந்த தேர்தலில் சூகி மீண்டும் வெற்றி பெற்றார்.  சூகியின் என் எல் டி கட்சி ஆட்சி அமைக்க இருந்த போது இன்று அதிகாலை அங்கு ராணுவப் புரட்சி மீண்டும் வெடித்துள்ளது.  ராணுவத்தினர் இன்று அதிகாலை சூகி உள்ளிட பல முக்கிய ஆளும் கட்சித் தலைவர்களைக் கைது செய்துள்ளது.

உலகெங்கும்  பரபரப்பை ஊட்டிய இந்த நிகழ்வை அடுத்து தற்போது மேலும் ஒரு தகவல் வந்துள்ளது. அதன்படி தற்போது மியான்மர் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள ராணுவம் இன்னும் ஒரு வருடத்துக்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.