டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில சுகாதாரத் துறையுடன் இயங்கும் வகையில் மத்திய அரசு குழுவையும் அனுப்பி இருக்கிறது.
இந் நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசுகள் உள்ளூர் ரீதியாக கட்டுப்பாடு விதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.