டெல்லி: ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை விடுவிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க, தலைமைநீதிபதி யுயு லலித் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் அரசியல் சாசன அமர்வை அமைத்து உத்தரவிட்டார்.

ஆயுள் தண்டனை பெறும் கைதிகள், 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பல கைதிகளை  நன்னடத்தையின் பேரில்,  முக்கிய தலைவர்கள் பிறந்தநாள், நாட்டின் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களில் முன்கூட்டியே மாநில அரசுகள் விடுதலை செய்து வருகின்றன. இதில் சில சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. ஆளும் கட்சிகள், தங்களது கட்சியினரை இதுபோன்ற தினங்களில் விடுதலை செய்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மாநில ஆளுநர் ஒப்புதலின்றி, கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,  அரசியல் சாசன பிரிவு 161ன் கீழ் அளுநரிடம் மாநில அரசுகள் பதிவுகளை அனுப்பாமல், மாநில அரசுகளே கைதிகளை மன்னித்து முன்கூட்டியே விடுப்பது சாத்தியமாக என்பது குறித்து  விவாதித்து முடிவு எடுக்க மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சூர்யகாந்த், ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு கொள்கையை உருவாக்க முடியுமா, ஆளுநரின் முன் பதிவுகளை வைக்காமல் நிர்வாகத்தால் நிவாரணம் வழங்கப்படுமா? என்பது தொடர்பாக, ஆனால் இறுதி விசாரணைக்கான விஷயத்தை பட்டியலிடுவதற்கு முன் வாதங்களை முடிக்க தரப்பினருக்கு நேரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனை கைதிகளை மாநில அரசு நேரடியாக விடுவிக்க முடியாது, ஆளுநர்களால் முடியும் என்று உத்தரவிட்டிருந்தது. கடந்த நடைபெற்ற வழக்கு ஒன்றை விசாரித்த  நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் மட்டுமே 161 வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது நிவாரண அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு ஆயுள் கைதியின் தண்டனையை ரத்து செய்ய மாநில அரசு விரும்பினால், சிஆர்பிசியின் பிரிவு 432 ஐ நாடுகிறது, ஆனால் ஆயுள் கைதியை அதற்கு முன்னதாக விடுவிக்க விரும்பினால் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, ஆளுநருக்கு அளிக்கப்பட்ட நிவாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவருக்கு அதற்கேற்ப ஆலோசனை வழங்க வேண்டும். அரசியலமைப்பின் 161 வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்பே ஆயுள் கைதியின் தண்டனையை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.