ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக  ஸ்ரீநகர் திட்டமிடல் ஆணையத்தின் முதன்மை பாதுகாப்பு  ஆணையர் ரோஹித் கன்சால் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யும் தீர்மானம் நேற்று இரு அவைககளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பிரிவை திரும்ப பெறும் தீர்மானத்தை, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசினா​ர்.

இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மாநில நிர்வாகம் எடுத்துள்ளது.

மேலும்,  ஜம்மு காஷ்மீர் மக்கள்  மத்திய அரசின் கோரிக்கை  ஏற்று மாநிலத்தில் முழுமையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க  மாநில நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும்   திட்டமிடல் ஆணையத்தின் முதன்மை பாதுகாப்பு  ஆணையர் ரோஹித் கன்சால் தெரிவித்து உள்ளார்.