சென்னை:

திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமை காக்கவும்,  போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு திமுக தலைவர்  ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9அம்ச கோரிக்கைகைளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெருமள வில் ஆசிரியர்கள் கலந்தகொண்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படு கிறது.  இதனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அரசு மற்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட் டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பல இடங்களில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மேலும் அரசு ஊழியர்களின் போராட் டத்துக்கு பொதுமக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதைத்தொடர்ந்து,   நேற்று முதல் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பலர் பணிக்கு திரும்பி உள்ளனர்.  99 சதவீதம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிகளுக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அதில்,

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்; ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்!

மாணவர்கள், மக்கள் நலன் கருதி ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும்.

போராட்டம் நடத்துவோர் மீது மிரட்டும் பாணியில் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்து உள்ளார்.