சென்னை:

லைநகர் டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர், காங். முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யார், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்தார். அவருடன் திருச்சி சிவா எம்.பி.. டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

போராடும் விவசாயிகளுடன் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் பழனிச்சாமி டில்லி வந்து விவசாயிகளை சந்தித்து தீர்வு கண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 19 வது நாளை எட்டியுள்ளது.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடும் வெயில் மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயது முதிர்ந்த நிலையிலும் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.