சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  சைக்கிள் ஒன்றுடன் கடை முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தினசரி சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது,  சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே  கடந்த செப்டம்பர் மாதம், அவர் சைக்கிளிக் சென்ற புகைப்படம் வைரலானது. இதை திமுகவினர் மேலும் வைரலாக்கி, தலைவர் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மேற்கொள்வதாக சிலாகித்தனர்.

ஆனால், ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் புகைப்படும் கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. அவர் உபயோகப்படுத்திய சைக்கிளின் விலை 1 லட்சத்து 74 ஆயுரத்து 490 ரூபாய் என்றும், அரசியல் விளம்பரத்துக்காக  அவர் ரு.2 லட்சத்தை கொரோனா காலத்தில் வீணடித்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், தற்போது, ஸ்டாலின் சைக்கிள் உடன் கடை முன்பு உட்காந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஸ்டாலின் சைக்கிள் புகைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனம்: