சென்னை
இன்று மரணம் அடைந்த நடராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று விடியற்காலை 1.35 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது பெசண்ட் நகர் இல்லத்தில் நடராஜன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். திமுக செயல்தலைவர் மு. க. ஸ்டாலின் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவரும் மு க ஸ்டாலினின் தந்தையுமான மு கருணாநிதியின் தலைமையில் நடராஜன் – சசிகலா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.