சென்னை தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில்  நடைபெறும் இந்த மாநாடு 2 நாட்கள்  நடைபெற இருக்கிறது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த காருத்தரங்கில் இந்திய அளவில் தென்னிந்திய பங்களிப்பு என்ற தலைப்பில் விவாதிக்கப்பட உள்ளது. திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைத்தளங்களில் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், குறைந்தபடச்சத்தில் பெருமளவில் படங்கள் வெளியாகும் நிலையில், தரமான படங்களை எப்படி வெளியிடுவது, அதற்கான அங்கீகாரத்தை எப்படி பெறுவது மற்றும் ஓடிடி வளர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்த விவாதங்களும் நடைபெற உள்ளது. மேலும், கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞரகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.