சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று  காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது முன்பு வைக்கப்பட்டுள்ள கணியினில் பட்ஜெட் குறித்த தகவலை பார்த்து வருகின்றனர்.