சென்னை:

பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், ‘‘பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா மாநிலம் குருகிராமில் போராட்டக்காரர்கள் என்ற போலியான போர்வையில் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் மீது குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ.க. அரசு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இதுபோன்ற செயல்களை கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு வன்முறையாளர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.