சென்னை:
பாஜ கூட்டணியில் சேர தமிழகத்துக்கு ‘நீட் விலக்கு’ கொடுப்பதை நிபந்தனையாக வையுங்கள் அதிமுகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பாஜக அதிமுக கூட்டணி தமிழக்ததில் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் பேட்டியளித்தார்.
இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் போது வாக்குறுதிகளை அள்ளி விடும் பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தருவாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க நீட் விலக்கு மசோதாவை நிபந்தனையாக அதிமுக முன்வைக்க வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் என்ற அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் மோடி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.